வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்: மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம்
வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம்தமிழக சட்டசபையில் இன்று பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன், வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026 தொடர்பாக தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார்.
அப்போது அவர் பேசியதாவது:வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026-ன் தற்போதைய அம்சங்கள் குறித்து தமிழக சட்டமன்றம் கவலை தெரிவிக்கிறது. குறிப்பாக, எப்.சி.ஆர்.ஏ. பதிவு காலாவதியாகுதல், புதுப்பிக்கப்படாதது, புதுப்பிப்பு நிராகரிக்கப்படுதல், பதிவு ரத்து செய்யப்படுதல் அல்லது பதிவு ஒப்படைக்கப்படுதல் போன்ற சூழ்நிலைகளில் தொண்டு நிறுவனங்களின் சொத்துகளை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல், நிர்வகித்தல், மாற்றுதல் மற்றும் விற்பனை செய்வது தொடர்பான விதிகள் கவலைக்குரியதாக உள்ளன.இத்தகைய விதிகள் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சி உரிமையை பாதிக்கக்கூடும். குறிப்பாக, சிறுபான்மையினரால் நடத்தப்படும் கல்வி மற்றும் சமூகநல நிறுவனங்களின் செயல்பாடுகளிலும் இதன் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.எனவே, இந்த மசோதாவை தற்போதைய வடிவிலேயே திரும்பப் பெற வேண்டும் என்றும், மாநில அரசுகள், தொண்டு நிறுவனங்கள், மத அமைப்புகள், கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள், சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் விரிவான ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழக சட்டமன்றம் வலியுறுத்துகிறது.மேலும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு திருத்தமும் இயற்கை நீதி, விகிதாசாரக் கொள்கை, சொத்துரிமைக்கான பாதுகாப்பு, நியாயமான எதிர்பார்ப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் அமைய வேண்டும்.அதே நேரத்தில், வெளிநாட்டு பங்களிப்புகளில் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புணர்வும் நிலைநிறுத்தப்படுவதுடன், சட்டப்பூர்வமாக செயல்படும் தொண்டு, கல்வி, மருத்துவம்,மதம்,கலாசாரம்மற்றும்சமூகநலஅமைப்புகளின்உரிமைகளும்பாதுகாக்கப்படவேண்டும்.இதையடுத்து, வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026-ஐ தற்போதைய வடிவில் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துவதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.