Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 15 செப்டம்பர் 2026 | 30 ஆவணி பராபவ வருடம்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... வாடிக்கையாளர்களை கவர்ந்த 'தங்க கொழுக்கட்டை' - கிலோ ரூ.27 ஆயிரத்துக்கு விற்பனை

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... வாடிக்கையாளர்களை கவர்ந்த 'தங்க கொழுக்கட்டை' - கிலோ ரூ.27 ஆயிரத்துக்கு விற்பனை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாசிக்கில் விற்பனைக்கு வந்துள்ள 24 காரட் சாப்பிடக்கூடிய தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை வாடிக்கையாளர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... வாடிக்கையாளர்களை கவர்ந்த 'தங்க கொழுக்கட்டை' - கிலோ ரூ.27 ஆயிரத்துக்கு விற்பனை விநாயகர் சதுர்த்தியையொட்டி, மராட்டிய மாநிலம் நாசிக்கில் 24 காரட் சாப்பிடக்கூடிய தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை விற்பனைக்கு வந்துள்ளது. இதன் தனித்துவமான தோற்றம் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. நாசிக்கில் செயல்பட்டு வரும் ‘சாகர் ஸ்வீட்ஸ்’ இனிப்பு கடையில், கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியின்போதும் இந்த தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் 24 காரட் தூய்மையான சாப்பிடக்கூடிய தங்க முலாம் பயன்படுத்தப்பட்ட கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கொழுக்கட்டை முதன்முதலில் 2021-ல் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஒரு கிலோ ரூ.12 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், இந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.27 ஆயிரமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலை அதிகமாக இருந்தாலும், கொழுக்கட்டையின் தரம் மற்றும் வித்தியாசமான தோற்றம் காரணமாக வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

Advertisement
முந்திரி, பாதாம், பிஸ்தா, பாலாடைக்கட்டி, குங்குமப்பூ, ஏலக்காய் தூள், நெய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு இந்த சிறப்பு கொழுக்கட்டை தயாரிக்கப்படுகிறது. இதன் மீது 24 காரட் தூய்மையான சாப்பிடக்கூடிய தங்க முலாம் பூசப்படுகிறது. சாப்பிடக்கூடிய தங்கம், ‘E 175’ என்ற குறியீட்டின் கீழ் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவில் உணவு சேர்க்கைப் பொருளாக அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட வகை தங்கமாகும். தூய தங்கம் மனித உடலின் செரிமான அமிலங்களுடன் வேதிவினை புரியாது. இதனால், அது ரத்தத்தில் கலக்காமல் செரிமானப் பாதை வழியாக உடலில் இருந்து கழிவாக வெளியேறுகிறது. எனினும், உணவில் தங்கத்தை சேர்ப்பதால் உடலுக்கு ஊட்டச்சத்து அல்லது மருத்துவ நன்மைகள் கிடையாது. ஆடம்பரத்தையும் உணவின் தோற்றத்தையும் மேம்படுத்துவதற்காகவே இது பயன்படுத்தப்படுகிறது. உணவில் பயன்படுத்தப்படும் தங்கம் 23 முதல் 24 காரட் தூய்மை கொண்டதாக இருக்க வேண்டும். அதேநேரத்தில், நகைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தங்கத்தில் செம்பு, நிக்கல், துத்தநாகம் உள்ளிட்ட பிற உலோகங்கள் கலக்கப்பட்டிருக்கும். எனவே, நகைகளுக்கான தங்கத்தை உட்கொள்வது கடுமையான நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு