Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 30 அக்டோபர் 2026 | 13 ஐப்பசி பராபவ வருடம்

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்: 6 மாதங்களுக்குள் திட்ட அறிக்கை – 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்: 6 மாதங்களுக்குள் திட்ட அறிக்கை – 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

தூத்துக்குடியில் பிரமாண்டமான கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கான திட்ட அறிக்கையை அடுத்த 6 மாதங்களுக்குள் இறுதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடியில் சர்வதேச தரத்திலான கப்பல் கட்டும் தளத்தை உருவாக்குவது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் தென்கொரியாவைச் சேர்ந்த 'எச்.டி. கொரியா கப்பல் கட்டுமானம் மற்றும் கடல்சார் என்ஜினீயரிங்' நிறுவனம், மத்திய அரசு மற்றும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகம் ஆகியவை இணைந்து ஒப்பந்தம் மேற்கொண்டன. இந்தியாவை சர்வதேச அளவில் கப்பல் கட்டுமானத் துறையின் முக்கிய மையமாக உருவாக்குவதுடன், நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். இதற்காக சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.38,132 கோடி செலவில் கப்பல் கட்டும் தளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட ஆய்வுப் பணிகளின் ஒரு பகுதியாக, கொரிய நிறுவனத்தின் பொறியியல் நிபுணர்கள் குழு கடந்த செப்டம்பர் மாதம் தமிழகம் வந்தது. அப்போது, கப்பல் கட்டும் தளம் அமையவுள்ள தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பகுதியில் நேரடி ஆய்வு மேற்கொண்டு திரும்பியது.

Advertisement
இதற்கிடையே, மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தென்கொரியாவின் சியோல் நகருக்குச் சென்று, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையில், தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்திற்கான கூட்டாண்மை ஏற்பாடுகள் மற்றும் விரிவான திட்ட அறிக்கையை அடுத்த 6 மாதங்களுக்குள் இறுதி செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கூட்டு நடவடிக்கைக் குழுவும் அமைக்கப்பட்டு, திட்டத்தை விரைவுபடுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் நிறைவேறும்பட்சத்தில் கப்பல் கட்டுமானத் துறையில் ஆயிரக்கணக்கான நிபுணர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும், இதர தொடர்புடைய துறைகள் வாயிலாக 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பொறியியல், மெக்கானிக்கல், வெல்டிங் மற்றும் கடல்சார் தொழில்நுட்பப் பிரிவுகளில் திறன் பெற்ற தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், இந்தப் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படுவதன் மூலம் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஆசியாவின் முக்கிய வர்த்தக மற்றும் கடல்சார் மையங்களில் ஒன்றாக வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு