Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 25 செப்டம்பர் 2026 | 9 புரட்டாசி பராபவ வருடம்

வண்டலூர் அருகே அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவா? போலீசார் விளக்கம்

வண்டலூர் அருகே அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவா? போலீசார் விளக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் கண்டிகை அருகே செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில், நேற்று மாலை சுற்றுச்சுவரைத் தாண்டி பள்ளிக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அந்த இளைஞரை கண்டறிந்து பிடிக்கும் பணியில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பாக தாம்பரம் மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், கண்டிகை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக புகார் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் கிடைத்தவுடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மூத்த பெண் காவல் அதிகாரிகளின் கண்காணிப்பில் பெண் காவல் ஆய்வாளர் தலைமையில் விசாரணை விரைவாக தொடங்கப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.

Advertisement
விசாரணையின் ஒரு பகுதியாக பள்ளி வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. மாணவிக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், சம்பவம் தொடர்புடையதாக கருதப்படும் சாட்சிகளிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டதுடன், கிடைத்த அறிவியல் மற்றும் பிற ஆதாரங்களும் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணை, மாணவியின் வாக்குமூலம் மற்றும் சேகரித்து சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், புகாரில் கூறப்பட்டபடி அரசு பள்ளியில் அந்த சம்பவம் நடைபெற்றதாக உறுதிப்படுத்தும் ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என தாம்பரம் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. அதேவேளை, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு, உறுதி செய்யப்படாத தகவல்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு