Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
புதன் | 02 செப்டம்பர் 2026 | 17 ஆவணி பராபவ வருடம்

ரூ.4,800 கோடியில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

ரூ.4,800 கோடியில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று பால்வளம், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இதனிடையே, சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் விஜய் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். குடிநீர் திட்டங்களுக்கு முக்கிய அறிவிப்புகள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்களில், வடசென்னை, ஆவடி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மீஞ்சூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக மாற்றும் ஆலை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கு ரூ.4,800 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது.ஆவடி மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.500 கோடி செலவில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.மதுரை மற்றும் கடலூர் மாநகராட்சிகள், 9 நகராட்சிகள், 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும். மேலும், பழமையான 33 கூட்டுக்குடிநீர் திட்டங்களை சீரமைக்க முதல்கட்டமாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை அதிகரிக்க ரூ.410 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.மதுரை மாநகராட்சியில் 40 ஆண்டுகள் பழமையான பாதாள சாக்கடை அமைப்பை சீரமைக்கும்பணிகள்முதல்கட்டமாகரூ.2,400கோடிமதிப்பீட்டில்நடப்பாண்டில்மேற்கொள்ளப்படும்.நாகர்கோவில் மாநகராட்சியில் விடுபட்ட மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலும், குன்றத்தூர் மற்றும் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிகளிலும் ரூ.960 கோடி மதிப்பில் புதிய பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.சென்னை பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.236 கோடி செலவிடப்படும். கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.256 கோடி மதிப்பில் 9 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமும், சேலம் மாநகராட்சியில் ரூ.291 கோடி மதிப்பில் 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமும் செயல்படுத்தப்படும். திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் இந்த இரண்டு திட்டங்களுக்கும் மொத்தம் ரூ.547 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது. சாலை மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு சென்னை உள்ளிட்ட அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் சாலைகளை சீரமைத்தல் மற்றும் புதிய சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.1,850 கோடி செலவிடப்படும்பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் சாலை வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், 105 சாலை சந்திப்புகள் மேம்படுத்தப்படும். இதற்காக ரூ.110 கோடி ஒதுக்கப்படும். இதேபோன்ற பணிகள் பிற மாநகராட்சிகளிலும் ரூ.165 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும். ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இப்பணிகளுக்கு மொத்தம் ரூ.275 கபொதுமக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுதஅதிகரிக்கவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். மக்கள் இயக்கமாக ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கதிருச்சி, திருப்பூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரிய பூங்காக்கள் ரூ.130 கோடி செலவில் அமைக்கப்படும். மேலும், மாநிலம் முழுவதும் 250 புதிய பூங்காக்கள் ரூ.175 கோடி செலவில் உருவாக்கப்படும். இதற்காக மொத்தம் ரூ.305 கோடி செலவிடப்படும்.புதிய வகுப்பறைகள் கட்டுதல், நவீன வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.335 கோடி செலவிடப்படும்.சிதம்பரம், கடலூர், கன்னியாகுமரிக்கு புதிய திட்டங்கள்சிதம்பரம் நகராட்சியில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற தில்லை நடராஜர் திருத்தேர் விழாவை சிறப்பாக நடத்தும் வகையில், கோவிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை, மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு கம்பிகளை தரைக்கு அடியில் கொண்டு செல்லும் பணிகள் மேற்கொள்ளப்படும். வீதிகளும் நவீன முறையில் சீரமைக்கப்படும். இதற்காக ரூ.36 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.கடலூரில் புனித டேவிட் கோட்டை முதல் வெள்ளி கடற்கரை வரை ரூ.8 கோடி செலவில் பாரம்பரிய நடைபாதை அமைக்கப்படும்.கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியை அழகுபடுத்துவதுடன், சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த ரூ.50 கோடி செலவிடப்படும்.பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் சாலைகள், மழைநீர் வடிகால்கள், தெருவிளக்குகள், நடைபாதைகள், திடக்கழிவு மேலாண்மை வசதிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி செலவிடப்படும். டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம், RC பதிவிறக்க வசதி போக்குவரத்துத் துறை சேவைகள் தொடர்பாகவும் முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார்.ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். புதிய வாகனம் வாங்குபவர்கள் டிஜிட்டல் RC-யை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்படும். மாநிலம் முழுவதும் இந்த வசதி செப்டம்பர் 15, 2026 முதல் நடைமுறைக்கு வரும்.போக்குவரத்து தொடர்பான அனைத்து அலுவலக சேவைகளையும் எந்த இடத்திலிருந்தும் பெறும் வகையிலான "Anywhere Registration / Licensing" வசதி படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.அரசு அலுவலகங்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ அமைப்புகள் QR குறியீட்டை ஸ்கேன் செய்து ஆவணங்களை மின்னணு முறையில் சரிபார்க்கும் வசதியும் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் ஆவணம் தொலைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ, அதை மீண்டும் பதிவிறக்கம் செய்து அச்சிட முடியும். விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, தங்களது வாழ்வாதாரம், உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார்.

Advertisement

ஜனநாயக உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசு, முந்தைய ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியாக போராடியபோது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மனிதநேய மற்றும் ஜனநாயகஅடிப்படையில்வாபஸ்பெறமுடிவுசெய்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அவர்களில் சிலர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பயன்படுத்தப்பட்டது.அதேபோல், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தினர். விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, விமான நிலையத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி அவர்கள் போராடினர். இந்தப் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீதும் முந்தைய அரசால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.மனிதநேயத்தையும் ஜனநாயகக் கொள்கைகளையும் கருத்தில் கொண்டு இந்த வழக்குகளை அனைத்தையும் திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்தார். இந்த நடவடிக்கை ஜனநாயக உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதுடன், பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையிலான நம்பிக்கையையும் உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு