Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
புதன் | 02 செப்டம்பர் 2026 | 17 ஆவணி பராபவ வருடம்

புதுக்கோட்டையில் அரசுப் பேருந்தில் இருந்து சாலையில் விழுந்த 10 பள்ளி மாணவிகள் காயம்

புதுக்கோட்டையில் அரசுப் பேருந்தில் இருந்து சாலையில் விழுந்த 10 பள்ளி மாணவிகள் காயம்

புதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்தின் கதவு எதிர்பாராதவிதமாக திறந்ததில், படிக்கட்டில் பயணம் செய்த 10 பள்ளி மாணவிகள் சாலையில் விழுந்து காயமடைந்தனர். இதில் ஒரு மாணவியின் காலில் பேருந்தின் சக்கரம் ஏறியதால் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்து கிராம மக்கள் திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் தினமும் அரசுப் பேருந்துகளில் புதுக்கோட்டையில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர். அந்த வகையில், புதன்கிழமை காலையும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் கீரனூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் பயணம் செய்தனர்.ரெங்கம்மாள்சத்திரம் அருகே பேருந்து சென்றபோது, அதில் வழக்கத்தைவிட அதிகளவில் கூட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் படிக்கட்டில் நின்று பயணம் செய்த மாணவிகளை பேருந்தில் இருந்து இறங்குமாறு நடத்துனர் கூறியுள்ளார். மாணவிகள் இறங்குவதற்கு தயங்கிய நிலையில், பேருந்தின் கதவு திடீரென திறந்ததாக கூறப்படுகிறது.இதனால் நிலைதடுமாறிய மாணவிகள், ஒருவர் பின் ஒருவராக ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் இருந்து சாலையில் விழுந்தனர். இதில் 10 மாணவிகள் காயமடைந்தனர்.

Advertisement
அவர்களில் ஒரு மாணவியின்காலில்பேருந்தின்சக்கரம்ஏறியதால்அவர்படுகாயமடைந்தார்.மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக அங்கு திரண்டனர். 108 ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து காயமடைந்த மாணவிகள் மீட்கப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வரும் நிலையில், அரசுப் பேருந்தில் மாணவிகளிடம் சாதிய மற்றும் அராஜகப் போக்கு காட்டப்பட்டதாகக் கூறி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நூற்றுக்கணக்கானோர் சம்பவ இடத்தில் திரண்டு, திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும் அரசு அதிகாரிகளும் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பேருந்து நடத்துனர் அர்ச்சுனன் மற்றும் ஓட்டுநர் மணிகண்டன் ஆகியோர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு