Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 29 செப்டம்பர் 2026 | 13 புரட்டாசி பராபவ வருடம்

ரூ.100 கோடி மோசடி வழக்கு: பி.டி.அரசகுமாரின் மகன், மகள் வீடுகளில் சோதனை

ரூ.100 கோடி மோசடி வழக்கு: பி.டி.அரசகுமாரின் மகன், மகள் வீடுகளில் சோதனை

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் டிடிசிபி, சிஎம்டிஏ உள்ளிட்ட பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி, தமிழகம் முழுவதும் பள்ளி நிர்வாகிகளிடம் சுமார் ரூ.100 கோடி வரை பணம் வசூலித்து மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.டி.அரசகுமார் உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பி.டி.அரசகுமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் கடந்த ஜூலை 11-ம் தேதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவரது மனைவி கோகிலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். 2024-25 காலகட்டத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு 2026-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து, கைது செய்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisement
மேலும், வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் கடந்த 23-ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. தொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், பி.டி.அரசகுமார் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள பி.டி.அரசகுமாரின் மகன் மற்றும் மகள் ஆகியோரின் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,765
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு