Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

‘ராமாயணா’ படத்தின் வசூல் வேட்டை: 5 நாட்களில் ரூ.663 கோடி வசூல்

‘ராமாயணா’ படத்தின் வசூல் வேட்டை: 5 நாட்களில் ரூ.663 கோடி வசூல்

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலக அளவில் ரூ.663 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் புகழ்பெற்ற இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ராவணன் வேடத்தில் யாஷும், அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோலும் நடித்துள்ளனர். இவர்களுடன் ரவி துபே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். சுமார் ரூ.2,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.

Advertisement
ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர். படத்தின் முதல் பாகம், ராவணன் சீதையைக் கடத்திச் செல்வதுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், படம் வெளியாகி ஐந்து நாட்களில் உலகம் முழுவதும் ரூ.663 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், திரைப்படத்திற்குக் கிடைத்து வரும் விமர்சனங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை அதிகரித்துள்ளன. குறிப்பாக, இந்தியா முழுவதும் ஆன்லைன் முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே ஒரு லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கிடைத்து வரும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு, இந்த வார இறுதிக்குள் படத்தின் மொத்த வசூல் ரூ.1,000 கோடியைக் கடக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு