Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 28 அக்டோபர் 2026 | 11 ஐப்பசி பராபவ வருடம்

ராணிப்பேட்டையில் மாயமான 1 வயது குழந்தை: 35 நாட்களுக்குப் பிறகு ஆந்திராவில் மீட்பு

ராணிப்பேட்டையில் மாயமான 1 வயது குழந்தை: 35 நாட்களுக்குப் பிறகு ஆந்திராவில் மீட்பு

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது மாயமான ஒரு வயது பெண் குழந்தை மகேஸ்வரி, 35 நாட்களுக்குப் பிறகு ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில் நிலையம் அருகே போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குழந்தை கடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பிரேமா. இந்தத் தம்பதியின் ஒரு வயது மகள் மகேஸ்வரி, கடந்த மாதம் 24-ம் தேதி இரவு வீட்டின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் குழந்தை திடீரென காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதியின் உத்தரவின்பேரில், குழந்தையைக் கடத்தியவர்களைக் கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, பல்வேறு கோணங்களில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement
தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில், குழந்தை ஆந்திர மாநிலத்துக்குக் கடத்திச் செல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, புதன்கிழமை அதிகாலை திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டா ரயில் நிலையம் அருகே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, கடந்த 35 நாட்களாகக் கடத்தி வைக்கப்பட்டிருந்த மகேஸ்வரியைப் பத்திரமாக மீட்டனர். குழந்தை மீட்கப்பட்ட இடத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் மல்லீஸ்வரி உள்ளிட்ட இருவரைப் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்ததாகக் கூறப்படும் ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒரு தம்பதி உட்பட 4 பேரையும் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தை கடத்தப்பட்டதன் பின்னணி என்ன, இந்தச் சம்பவத்தில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்கப்பட்ட மகேஸ்வரி விரைவில் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு