Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 04 நவம்பர் 2026 | 18 ஐப்பசி பராபவ வருடம்

ரூ. 30 கோடி பேரம்? ஆட்சியை கவிழ்க்க திமுக, அதிமுக கூட்டுச்சதி - தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா பரபரப்பு குற்றச்சாட்டு

ரூ. 30 கோடி  பேரம்? ஆட்சியை கவிழ்க்க  திமுக, அதிமுக கூட்டுச்சதி - தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழகத்தில் தவெக ஆட்சியைக் கவிழ்க்க திமுகவும், அதிமுகவும் இணைந்து செயல்படுவதாகவும், சட்டப்பேரவையில் அரசுக்கு எதிராக வாக்களிக்க தனக்கு ரூ.30 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகவும் தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா குற்றம்சாட்டியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுகவும் அதிமுகவும் இணைந்து தவெக ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிப்பதாகத் தெரிவித்தார். தேர்தலில் தவெக வெற்றி பெறாது என இரு கட்சிகளும் எதிர்பார்த்த நிலையில், மக்கள் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, அரசின் செயல்பாடுகளை முடக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறினார். மேலும், தவெக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் திமுக, அதிமுக தரப்பினர் ஈடுபட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக தனக்கே தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் முஸ்தபா தெரிவித்தார். அந்த அழைப்பில், முதலில் ரூ.15 கோடி பெற்றுக்கொண்டு, சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும்போது அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும், அதன்பின்னர் மேலும் ரூ.15 கோடி வழங்கப்படும் என்றும் கூறியதாக அவர் குற்றம்சாட்டினார். மொத்தம் ரூ.30 கோடி தருவதாகப் பேரம் பேசப்பட்ட இந்த விவகாரம் குறித்து கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற முடியாத திமுகவும், அதிமுகவும் தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்க முயற்சிப்பதாக முஸ்தபா விமர்சித்தார்.

Advertisement
இந்தப் பேர முயற்சியில் அதிமுகவினரும் ஈடுபட்டுள்ளதாகவும், மதுரையைச் சேர்ந்த அதிமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர் தன்னைத் தொடர்புகொண்டதாகவும் அவர் தெரிவித்தார். தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.100 கோடி கொடுத்தாலும் அவர்கள் கட்சியை விட்டு விலக மாட்டார்கள் என்று கூறிய முஸ்தபா, இந்தக் கூட்டுச்சதியில் திமுகவும் அதிமுகவும் இணைந்து செயல்படுவதாக மீண்டும் குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும் என்றும், உண்மையை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்தார். தேர்தல் களத்தில் திமுக 35 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதாகவும், அதிமுகவுடன் கூட்டணி சேர யாரும் முன்வராத நிலையில், எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தவெக 35 சதவீத வாக்குகளைப் பெற்று வரலாற்றுச் சாதனையுடன் ஆட்சியைப் பிடித்ததாகவும் அவர் கூறினார். தவெக ஆட்சியைக் கவிழ்க்க திமுகவும் அதிமுகவும் இணைந்து சட்டமன்ற உறுப்பினர்களிடம் பணப் பேரத்தில் ஈடுபடுவதாக முஸ்தபா முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு