Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 04 நவம்பர் 2026 | 18 ஐப்பசி பராபவ வருடம்

மதுரை மத்திய சிறையில் போலீஸ்காரரை தாக்கிய கைதி

மதுரை மத்திய சிறையில் போலீஸ்காரரை தாக்கிய கைதி

மதுரை மத்திய சிறையில் விசாரணையின்போது ஆத்திரமடைந்த கைதி ஒருவர், போலீஸ்காரரை முகத்தில் தாக்கியதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். தேனி மாவட்ட சிறையில் கடந்த 26-ம் தேதி இரவு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தப்பிச் சென்ற கைதிகள் அனைவரையும் போலீசார் விரைந்து பிடித்து மீண்டும் வெவ்வேறு சிறைகளில் அடைத்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் பாதுகாப்பை அதிகரிக்க சிறைத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன்படி, மதுரை மத்திய சிறையிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறையின் நுழைவுவாயில் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement
இந்நிலையில், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளைஞர் ஒருவரின் நடவடிக்கையில் நேற்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கிருந்த போலீஸ்காரர் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கைதி, போலீஸ்காரரின் முகத்தில் தாக்கியுள்ளார். இதனால் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்து காயமடைந்தார். இதைத்தொடர்ந்து, சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் போலீஸ்காரருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்படவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு