சேலம் தொப்பூர் பகுதியில் முதலமைச்சர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் (எஸ்.எஸ்.ஐ.) திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (செவ்வாய்க்கிழமை) சேலம் வந்துள்ளார். இதையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த நிலையில், தொப்பூர் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன் மற்றும் மது ஆகிய இருவரும் திடீரென மயங்கி கீழே விழுந்தனர்.
Advertisement
இதைக் கண்ட சக போலீசார் உடனடியாக இருவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.முதற்கட்ட தகவலின்படி, மயங்கி விழுந்த இருவரும் ஏற்கனவே இருதய நோய்க்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.