Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 04 செப்டம்பர் 2026 | 19 ஆவணி பராபவ வருடம்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் – தலைமை ஆசிரியர் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் – தலைமை ஆசிரியர் கைது

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் புகாரில், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சமயபுரம் அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக மண்ணச்சநல்லூர் கல்பாளையம் ரோடு சாஸ்தா நகரைச் சேர்ந்த ஜெயராஜ் (53) பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பள்ளியில் படிக்கும் 4 மாணவிகளுக்கு ஜெயராஜ் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள், நடந்த சம்பவம் குறித்து நேற்று முன்தினம் தங்களது பெற்றோரிடம் அழுதபடி தெரிவித்துள்ளனர்.இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், நேற்று காலை பள்ளிக்கு நேரில் சென்று இதுகுறித்து விளக்கம் கேட்க முயன்றனர்.

Advertisement
ஆனால், அவர்களை பள்ளி நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு, நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு முற்றுகையில் ஈடுபட்டிருந்த பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அமைதிப்படுத்தினர்.பின்னர் பள்ளிக்குள் சென்ற போலீசார், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் புகாரில் தலைமை ஆசிரியர் ஜெயராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் சமயபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு