Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
ஞாயிறு | 06 செப்டம்பர் 2026 | 21 ஆவணி பராபவ வருடம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பூஜைகள் இன்று தொடக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பூஜைகள் இன்று தொடக்கம்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வரும் 17-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வடக்கு ஆடி வீதியில் 56 யாகசாலைகள் மற்றும் 184 யாக குண்டங்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதில் அம்மன் சன்னதிக்காகவும், சுவாமி சன்னதிக்காகவும்தலா33யாககுண்டங்கள்அமைக்கப்படுகின்றன.இந்த நிலையில், கும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்க பூஜைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வரும் 11-ந்தேதி வரை நடைபெற உள்ளன.இதையொட்டிஇன்றுகாலை7மணிக்குமேல்அம்மனசன்னதிமற்றும்சித்திவிநாயகர்சன்னதிமுன்புவிக்னேஸ்வரபூஜையுடன்நிகழ்ச்சிகள்தொடங்குகின்றன.இதைத்தொடர்ந்து, பூஜைகளை நடத்த சுவாமியிடம் அனுமதி பெறுதல், கஜபூஜை, கோ பூஜை, தனபூஜை உள்ளிட்டபல்வேறுபூஜைகள்நடைபெஉள்ளன.கும்பாபிஷேகத்துக்க அமைக்கப்படும் யாகசாலைகளில் பயன்படுத்த வேண்டிய ஹோமப் பொருட்களும் தற்போது கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன.

Advertisement
கோவிலில் உள்ள 514 சுவாமிகளுக்குத் தேவையான சிறிய மற்றும் பெரிய அளவிலான பித்தளை கலசங்கள் ஏற்கனவே வந்துள்ளன. அவற்றுக்கு நூல் சுற்றும் பணியில் பட்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.மேலும், கலசங்களில் நிரப்புவதற்காக காசியில் உள்ள புண்ணிய நதியான கங்கையில் இருந்து 1,008 லிட்டர் புனிதநீர் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல், 7 புண்ணிய நதிகளில் இருந்தும் 1,008 லிட்டர் புனிதநீர் கொண்டு வரப்பட்டுள்ளது.இதுதவிர, 9 வகையான தானியங்கள், மூலிகைப் பொடிகள், ஆலங்குச்சி, அரசங்குச்சி, பசுநெய் உள்ளிட்ட 96 வகையான ஹோமப் பொருட்கள் மூட்டை மூட்டையாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. யாகசாலையில் பட்டர்கள் அமர்வதற்குத் தேவையான மரப்பலகைகள் உள்ளிட்ட பிற பொருட்களும் கோவிலுக்கு தொடர்ந்து கொண்டு வரப்படுகின்றன.இதன் மூலம் மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்துக்கான பணிகள், கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை தலைமையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு