இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். டி20 தொடரில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் இருந்து ஒருநாள் போட்டிக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அனுபவ வீரர் ஜோ ரூட் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அடில் ரஷித் இந்தப் போட்டியில் விளையாடவில்லை.
Advertisement
அவருக்கு பதிலாக ரெஹான் அகமது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை அணிக்கு குசல் மெண்டிஸ் கேப்டனாக செயல்படுகிறார். சமீபத்தில் நிறைவடைந்த டி20 தொடரைத் தொடர்ந்து இரு அணிகளும் தற்போது ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இதையடுத்து ஒருநாள் தொடரையும் வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது.