Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 24 செப்டம்பர் 2026 | 8 புரட்டாசி பராபவ வருடம்

“மண்டாடி” படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டிய கமல்

“மண்டாடி” படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டிய கமல்

சூரி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் பார்த்து, படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் சூரியின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ள ‘மண்டாடி’, நேர்மறையான விமர்சனங்களுடன் ரசிகர்களின் ஆதரவையும் பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

Advertisement
நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் படத்தைப் பாராட்டியிருந்தனர். இந்த நிலையில், ‘மண்டாடி’ திரைப்படத்தை பார்த்த கமல்ஹாசன், படக்குழுவினரை நேரில் சந்தித்து தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். அப்போது படக்குழுவினரிடம் பேசிய கமல்ஹாசன், படத்தின் வசனங்கள் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், இதுபோன்ற கதைகளை முன்னணி நடிகர்களும் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், “இது போன்ற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. சூரிக்கு அது கிடைத்திருக்கிறது. மிக்க மகிழ்ச்சி” என அவர் கூறியுள்ளார். கமல்ஹாசன் நேரில் சந்தித்து பாராட்டிய தருணம் தங்களுக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளதாக ‘மண்டாடி’ படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து படத்துக்கு கிடைத்து வரும் பாராட்டுகளும் ஆதரவும் படக்குழுவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,000
🥈 Silver ₹250.00
Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு