Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.1.25 லட்சம் கோடியில் திட்டங்கள்: டெல்லி முதல்-மந்திரி பெருமிதம்

போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.1.25 லட்சம் கோடியில் திட்டங்கள்: டெல்லி முதல்-மந்திரி பெருமிதம்

டெல்லியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக முதல்-மந்திரி ரேகா குப்தா தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற ‘நமோ யமுனா ரிவர் சபாரி’ திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட முதல்-மந்திரி ரேகா குப்தா பேசுகையில், பிரதமர் மோடியின் தலைமையிலும், மத்திய மந்திரி நிதின் கட்காரியின் சிறப்பான ஒருங்கிணைப்பிலும் டெல்லியில் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதன் மூலம் பெரிய மேம்பாலங்கள் மற்றும் புதிய விரைவுச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 21 மாதங்களில் டெல்லி அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய ரேகா குப்தா, முந்தைய அரசு இதுபோன்ற முயற்சிகளை மேற்கொண்டதா என கேள்வி எழுப்பினார். திருவிழாக்களை கொண்டாடுவதுடன் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும் என்பதை அரசு உறுதி செய்துள்ளதா என்றும் அவர் பேசினார். டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு டெல்லியில் குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில், காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டதை தொடர்ந்து, காற்று மாசு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்ததாக தகவல்கள் வெளியாகின. காற்றில் மாசு அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பை தாண்டுவதால், பொதுமக்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சினை பல ஆண்டுகளாக டெல்லியில் நீடித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முதல்-மந்திரி ரேகா குப்தா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisement
அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, டெல்லி அரசு ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறை அக்டோபர் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையும் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பி.எஸ்.6 மாசு வெளியீட்டு தரநிலைக்கு இணங்காத வாகனங்கள் டெல்லிக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த கட்டுப்பாடு நவம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. பி.எஸ்.6 தரத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்களாக இருந்தாலும், அவற்றின் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழை வைத்திருப்பது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாசு ஏற்படுத்தும் அடுப்புகளுக்கும் கட்டுப்பாடு விறகு மற்றும் நிலக்கரி அடுப்புகளை பயன்படுத்துவதையும் அரசு கட்டுப்படுத்தி வருகிறது. கட்டுமான பணிகள் மற்றும் வாகனங்களுக்கான மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் தொடர்பான ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிகளும் தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த டெல்லி போலீசார் அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும், டெல்லி எல்லைப் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு