Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 16 செப்டம்பர் 2026 | 31 ஆவணி பராபவ வருடம்

பைக்கில் சென்ற இளம்பெண் மீது கார் மோதல்: ராஜஸ்தானில் டிரைவர் கைது

பைக்கில் சென்ற இளம்பெண் மீது கார் மோதல்: ராஜஸ்தானில் டிரைவர் கைது

டெல்லியைச் சேர்ந்த சிவானி சவுகான் என்ற இளம்பெண், தனது நண்பர்களுடன் பைக்கில் குருகிராமுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது கார் மோதி காயமடைந்த சம்பவத்தில், காரை ஓட்டிய கல்யாண் பைஸ்லாவை ராஜஸ்தானில் போலீசார் நேற்று கைது செய்தனர். சம்பவத்தன்று நண்பர்களுடன் பைக் சவாரி சென்ற சிவானி, திரும்பும் வழியில் கோல்ப் கோர்ஸ் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த ஒருவர், அவரை வழிவிடுமாறு கூறியபடியே சிவானியின் பைக்கை மோதிவிட்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சிவானிக்கு காயம் ஏற்பட்டது. இதனைப் பார்த்த சிவானியின் தோழி ஒருவர், காரை பின்தொடர்ந்து சென்று தடுத்து நிறுத்தினார். அப்போது காரில் இருந்த நபர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் காரை வேகமாக ஓட்டிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
சிவானியின் பைக்கில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் சம்பவம் தொடர்பான காட்சிகள் பதிவாகியிருந்தன. அந்த வீடியோவை சிவானி சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, கார் ஓட்டுநர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில், சிவானி மீது காரை மோதியதாகக் கூறப்படும் கல்யாண் பைஸ்லாவை ராஜஸ்தானில் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கார் ராணுவ அதிகாரி ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் எதிர்பாராத விதமாக நடந்ததாகவும், சிவானியை வேண்டுமென்றே காரால் மோதவில்லை என்றும் கல்யாண் பைஸ்லா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு