Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 25 செப்டம்பர் 2026 | 9 புரட்டாசி பராபவ வருடம்

பெரம்பலூர்: ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் 80 பவுன் நகை, ரொக்கம் கொள்ளை

பெரம்பலூர்: ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் 80 பவுன் நகை, ரொக்கம் கொள்ளை

பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் வீட்டில் இருந்து 80 பவுன் தங்க நகைகள் மற்றும் பல லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள குரும்பலூர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி தேவ சகாயசுத்தரி என்ற ராஜலட்சுமி (60). திருச்சி மாவட்டம் புதூர்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராஜலட்சுமிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகள் திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். மகன் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் பணியாற்றி வருகிறார். வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ஆரோக்கியராஜ் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ராஜலட்சுமி தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், அவரது மகள் வழி பேத்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததால், கடந்த 10-ம் தேதி ராஜலட்சுமி சென்னை சென்றதாக கூறப்படுகிறது.

Advertisement
இதற்கிடையே, குரும்பலூர் பாளையத்தில் உள்ள ராஜலட்சுமியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் கவனித்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜலட்சுமிக்கும் போலீசாருக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் ராஜலட்சுமி சென்னையில் இருந்து அவசரமாக பெரம்பலூர் திரும்பினார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அவரது மகனின் திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் பல லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கொள்ளை போன பொருட்களின் முழுமையான மதிப்பு ராஜலட்சுமி பெரம்பலூர் வந்த பிறகே உறுதி செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் குரும்பலூர் பாளையம் கிராம மக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு