Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 25 செப்டம்பர் 2026 | 9 புரட்டாசி பராபவ வருடம்

பெரம்பலூர்: ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 80 சவரன் நகை கொள்ளை - போலீசார் தீவிர விசாரணை

பெரம்பலூர்: ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 80 சவரன் நகை கொள்ளை - போலீசார் தீவிர விசாரணை

பெரம்பலூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியரும் அவரது குடும்பத்தினரும் வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றிருந்த நிலையில், இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவில் இருந்த சுமார் 80 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

Advertisement
மேலும், வீட்டில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை ஆய்வு செய்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு