Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 12 செப்டம்பர் 2026 | 27 ஆவணி பராபவ வருடம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 'கில்லி' நடிகர் சிவா காலமானார்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 'கில்லி' நடிகர் சிவா காலமானார்

நடிகர் விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் சிவா, உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். புற்றுநோயுடன் போராடி வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.தமிழ் சினிமாவில் குறைந்த அளவிலான படங்களில் நடித்திருந்தாலும், ‘கில்லி’ திரைப்படத்தில் அவர் ஏற்ற கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. குறிப்பாக படத்தின் ஆரம்பக் காட்சிகளில் அவரது நடிப்பு பேசப்பட்டதுடன், அதன் பின்னர் அவர் ‘கில்லி சிவா’ என்ற பெயரால் ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.‘கில்லி’ படத்துக்குப் பிறகு நடிகர் சிவா, விஜய் நடித்த சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

Advertisement
பெரும்பாலும் சிறிய கதாபாத்திரங்களில் தோன்றிய அவர், தனது இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.நடிகர் சிவாவின் மறைவு செய்தியை தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நீண்ட காலமாக புற்றுநோயுடன் போராடி வந்த நடிகர் சிவாவின் மறைவு, தமிழ் திரையுலகிற்கு ஏற்பட்டுள்ள மற்றொரு இழப்பாக பார்க்கப்படுகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
PRGI NO : TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு