Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

புதுக்கோட்டை நூலகத்தில் 835 போலி புத்தகங்கள் கண்டுபிடிப்பு – அதிரடி அகற்றம்

புதுக்கோட்டை நூலகத்தில் 835 போலி புத்தகங்கள் கண்டுபிடிப்பு – அதிரடி அகற்றம்

புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்கள் வெளியிட்டதாகக் கூறப்படும் 835 போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. கோவை காந்திபுரத்தில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டது. இந்த வளாகத்தை கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இங்குள்ள நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், நூலகத்தில் இடம்பெற்றுள்ள பல புத்தகங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியாக உருவாக்கப்பட்டவை என்றும், குறிப்பிட்ட பதிப்பகத்தின் பெயரில் அதிக எண்ணிக்கையிலான போலி புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்தக் குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உறுதியளித்தார்.

Advertisement
இதையடுத்து, கோவை பெரியார் அறிவுலகத்தில் எழுந்த புகாரைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் ஆய்வு மேற்கொண்டு போலி புத்தகங்களை அடையாளம் கண்டு அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் ஆகிய இரண்டு பதிப்பகங்களின் புத்தகங்கள் தீவிரமாகச் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் கடந்த 10ஆம் தேதி தொடங்கிய ஆய்வுப் பணி நேற்று நள்ளிரவு நிறைவடைந்தது. இதில் மொத்தம் 835 புத்தகங்கள் போலியானவை எனக் கண்டறியப்பட்டு நூலகத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன. அவற்றில் அகல் விளக்கு பதிப்பகம் வெளியிட்ட 619 புத்தகங்களும், பீனிக்ஸ் பதிப்பகம் வெளியிட்ட 216 புத்தகங்களும் அடங்கும் என நூலகர்கள் தெரிவித்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு