Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 29 செப்டம்பர் 2026 | 13 புரட்டாசி பராபவ வருடம்

புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு: பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் போராட்டம்; போலீஸ் குவிப்பு

புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு: பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் போராட்டம்; போலீஸ் குவிப்பு

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதையொட்டி போராட்டம் நடைபெறும் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் விஜய் சமீபத்தில் சட்டப்பேரவையில் வெளியிட்டார். தொடர்ந்து, திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேபோல், பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் குடியிருப்பாளர்களும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடலோரப் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படுவதால், தங்களின் பாரம்பரிய மீன்பிடித் தொழிலும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Advertisement
இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி, இன்று (செப். 29) மீனவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை முள்ளிக்குப்பம், முள்ளிமா நகர் மற்றும் மயிலை பகுதியைச் சேர்ந்த அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை வெளியிட்டிருந்தது. மேலும், புதிய தலைமைச் செயலகம் அமைய உள்ள பகுதியை மீனவர்களின் பாரம்பரிய குடியிருப்புப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தாத நிலையில், தொடர்ந்து போராட்டங்களை நடத்த மீனவ மக்கள் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பட்டினப்பாக்கத்தில் இன்று நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு, போராட்டம் நடைபெறும் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,765
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு