பிரான்சில் கொந்தளிக்கும் காட்டுத்தீ; 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
பிரான்சின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள லேஜ் கேப்-பெரெட் கடலோர சுற்றுலா நகரை ஒட்டிய வனப்பகுதியில் இரவு நேரத்தில் கடுமையான காட்டுத்தீ பரவியது. பலத்த காற்றின் தாக்கத்தால் தீ வேகமாக விரிந்து, சுமார் 4,900 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையானது. இந்தச் சூழ்நிலையில், அப்பகுதியில் செயல்பட்டு வந்த 8 சுற்றுலா முகாம்களில் தங்கியிருந்த பயணிகளும், வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்புகளில் வசித்த பொதுமக்களும் சேர்த்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நள்ளிரவில் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த 500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.