பிரதமராக யார் வருவார்? கருத்துக்கணிப்பில் 3-வது இடம் பிடித்த தமிழக முதல்வர் விஜய்
2029-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் முதல் முறையாக களமிறங்கிய தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தி.மு.க. கூட்டணி 73 தொகுதிகளுடன் 2-வது இடத்திலும், அ.தி.மு.க. கூட்டணி 53 தொகுதிகளுடன் 3-வது இடத்திலும் இருந்தது.ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை த.வெ.க.வுக்கு கிடைக்காத நிலையில், அதிக இடங்களில் வெற்றி பெற்ற அந்தக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ், த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தது. இதனுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றின் ஆதரவையும் பெற்று த.வெ.க. ஆட்சியமைத்தது.இதையடுத்து மே 10-ந்தேதி விஜய் தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்றார். சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் த.வெ.க. அரசு வெற்றி பெற்றது. பின்னர் அந்த அரசின் முதல் பொது பட்ஜெட்டும், வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அரசின் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டங்களையும் த.வெ.க. நடத்தி வருகிறது.இந்த சூழலில், 2029 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பிரதமராக யாரை விரும்புகிறார்கள் என்பதை அறிய இந்தியா டுடே மற்றும் சி-வோட்டர் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் பிரதமர் தேர்வில் நரேந்திர மோடிக்கு 48.7 சதவீத ஆதரவும், ராகுல் காந்திக்கு 27.1 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளன. தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு 9.2 சதவீத ஆதரவு கிடைத்து 3-வது இடம் கிடைத்துள்ளது.திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு 2 சதவீதமும், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு 1.7 சதவீதமும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளரான அபிஜீத் திப்கேவுக்கு 1.3 சதவீதமும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 1.2 சதவீதமும் ஆதரவு கிடைத்துள்ளது. இவர்களைவிட விஜய் அதிக ஆதரவை பெற்றுள்ளார்.இதன்படி, பிரதமர் பதவிக்கான தேர்வில் 48.7 சதவீத ஆதரவுடன் நரேந்திர மோடி முதலிடத்திலும், 27.1 சதவீதத்துடன் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி 2-வது இடத்திலும் உள்ளனர். தேசிய அளவில் 9.2 சதவீத ஆதரவுடன் தமிழக முதல்-அமைச்சர் விஜய் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.த.வெ.க.