Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 25 செப்டம்பர் 2026 | 9 புரட்டாசி பராபவ வருடம்

‘பார்க்கிங்’ இயக்குநருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்... தொடங்கியது புதிய அத்தியாயம்

‘பார்க்கிங்’ இயக்குநருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்... தொடங்கியது புதிய அத்தியாயம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். ‘மெரினா’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், அடுத்தடுத்து வெற்றிப்படங்களை வழங்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார். குறிப்பாக, அவரது நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து வெளியான ‘மதராஸி’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய படங்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றன. தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். மதுரையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement
இதற்கான பூஜையும் நடைபெற்றுள்ளது. ‘பார்க்கிங்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற ராம்குமார் பாலகிருஷ்ணன், அந்தப் படத்திற்காக தேசிய விருதையும் பெற்றுள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘SK27’ என பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது எக்ஸ் தள பதிவில், ‘SK27’ திரைப்படம் மட்டுமல்ல என்றும், இன்று தொடங்கும் ஒரு கனவு என்றும் குறிப்பிட்டுள்ளார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து புதிய அத்தியாயத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், படத்துக்கு அனைவரின் ஆசீர்வாதமும் ஆதரவும் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு