Skip to main content
🌤️ —°C
சனி | 15 ஆகஸ்ட் 2026 | 30 ஆடி பராபவ வருடம்

பாக்கெட்டில் யார் படம்? ஓபிஎஸ் - செங்கோட்டையன் இடையே காரசார விவாதம்

பாக்கெட்டில் யார் படம்? ஓபிஎஸ் - செங்கோட்டையன் இடையே காரசார விவாதம்
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று 3-வது நாளாக நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.அப்போது, தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான அரசின் பட்ஜெட் குறித்து அவர் கடுமையாக விமர்சித்தார். தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும், பெயர் மாற்றம் செய்யப்பட்ட திட்டங்களின் தொகுப்பாகவே நிதிநிலை அறிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.பெண்களுக்கான உரிமைத்தொகை உயர்த்தப்படவில்லை என்றும், 6 சிலிண்டர்கள் வழங்குவது தொடர்பான அறிவிப்பும் இடம்பெறவில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும், மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் இலவச பயணம் வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.மேலும், பட்ஜெட்டின் ஒவ்வொரு பக்கத்திலும் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களே இடம்பெற்றுள்ளதாகவும், புதிய அரசின் திட்டங்களைத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்தார்.இதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளிக்கையில், 5 ஆண்டுகளுக்குள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்றும், ஓ.பன்னீர்செல்வம் கூறுவதைப் போல 3 மாதங்களிலேயே அனைத்தையும் செய்து வரலாறு படைக்க முடியாது என்றும் தெரிவித்தார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் தற்போது இடம் மாறியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதற்காக இவ்வளவு பாராட்டிப் பேச வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், முதலில் இடம் மாறியது செங்கோட்டையன்தான் எனக் கூறினார்.தொடர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், இடம் மாறியபோதும் இதயத்துக்கு அருகில் வைத்திருக்கும் படத்தை மட்டும் மாற்ற வேண்டாம் என்று முதல்-அமைச்சர் விஜய் கூறியதாக தெரிவித்தார்.
Advertisement
மேலும், ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலத்திலேயே அந்தப் பொறுப்பை வகித்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது யாருடைய படத்தை வைத்திருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார்.இதையடுத்து அமைச்சர் ராஜ்மோகன், ஓ.பன்னீர்செல்வம் இடத்தை மட்டுமின்றி இதயத்தையும் மாற்றிவிட்டதாக விமர்சித்தார்.இதற்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்கையில், அண்ணா, ஜெயலலிதா, கலைஞர் ஆகிய அனைவரும் தனது இதயத்தில் இருப்பதாகக் கூறினார். படம் வைத்திருப்பதன் மூலம் யாரையும் ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார். தற்போது தான் சட்டமன்ற உறுப்பினராக பேரவையில் இருப்பதற்கு காரணம் மு.க.ஸ்டாலின் என்பதால், அவரது படத்தை வைத்திருப்பதாகவும் விளக்கம் அளித்தார்.தனது நிலைப்பாடு திராவிட இயக்கத்தைச் சுற்றியே இருக்கும் என்றும், தான் எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.மேலும், பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவது மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.கடன் பெறாமல் 50 ஆண்டுகள் ஆட்சி நடத்த முடியாது என நிதித்துறை செயலாளர் கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் பிரசாரத்தின்போது பேசியது தவறு என்பதை முதல்-அமைச்சர் தற்போது உணர்ந்திருப்பார் என்றும் தெரிவித்தார். சட்டசபையில் யாருடைய படத்தை வைத்திருக்கிறார் என்பது தொடர்பாக தொடங்கிய நகைச்சுவையான விவாதம், பின்னர் காரசாரமான கருத்து மோதலாக மாறியது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு