தெலுங்கு திரைப்பட உலகின் மூத்த நடிகையான பவள சியமலா, உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு 75 வயது.மேடை நாடகங்கள் மூலம் தனது கலைப்பயணத்தைத் தொடங்கிய பவள சியமலா, 1984ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாபாத்திர மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துப் பாராட்டைப் பெற்றார்.சில நாட்களாக உடல்நலப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த அவர், ஐதராபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
Advertisement
இந்த நிலையில், சிகிச்சை நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் இன்று உயிரிழந்தார். பவள சியமலாவின் மறைவு அவரது ரசிகர்களையும், தெலுங்கு திரைப்படத் துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது இறுதிச்சடங்கு நாளை ஐதராபாத்தில் நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.