பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: 45 நாட்கள் ரோப் கார் சேவை நிறுத்தம்
பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் நடைபெற உள்ள வருடாந்திர பராமரிப்பு பணிகளையொட்டி, ரோப் கார் சேவை இன்று (ஜூலை 20) முதல் செப்டம்பர் 14 வரை மொத்தம் 45 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் மலை உச்சியில் அமைந்துள்ளதால், பக்தர்கள் அடிவாரத்திலிருந்து படிப்பாதை மற்றும் யானைப்பாதை வழியாக கோவிலுக்கு செல்கின்றனர். இதனுடன், ரோப் கார் மற்றும் மின்இழுவை ரெயில் சேவைகளும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக, மலைக்குச் சுலபமாகவும் குறைந்த நேரத்திலும் செல்லும் வசதியுடன், இயற்கை காட்சிகளை ரசிக்கும் அனுபவத்தையும் வழங்குவதால் ரோப் கார் சேவையை ஏராளமான பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ரோப் கார் நிலையத்தில் மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் வழக்கமாக மேற்கொள்ளப்படுகின்றன.