Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 22 அக்டோபர் 2026 | 5 ஐப்பசி பராபவ வருடம்

பள்ளிக்கரணை தடுப்புச்சுவரை உடைக்க வேண்டும் - அன்புமணி

பள்ளிக்கரணை தடுப்புச்சுவரை உடைக்க வேண்டும் - அன்புமணி

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அமைக்கப்பட்டு வரும் தடுப்புச்சுவர் மற்றும் நடைபாதை பணிகளை உடனடியாக நிறுத்தி, ஏற்கனவே கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்ற வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நெய்தல் மீட்சி மற்றும் பாதுகாப்புப் பணிகள் என்ற பெயரில் சுமார் 3 கி.மீ. நீளத்திற்கு 6 அடி உயர தடுப்புச்சுவரும், அதன் உட்பகுதியில் 2 கி.மீ. நீளத்திற்கு நடைபாதையும் அமைக்கப்பட்டு வருகின்றன. இக்கட்டுமானங்கள் மழைநீரின் இயல்பான ஓட்டத்தைத் தடுக்கும் என்பதால், பள்ளிக்கரணை, ஜல்லடியான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பாதிப்பு ஏற்படும் என பா.ம.க. ஏற்கனவே எச்சரித்திருந்தது. கடந்த 17-ஆம் தேதி பெய்த மழையின்போது, சுற்றுப்பகுதிகளில் தேங்கிய மழைநீர் சதுப்பு நிலத்திற்குள் செல்ல முடியாமல் வெள்ளம்போல் தேங்கியுள்ளது. இதனால், வனத்துறை சார்பில் இயந்திரங்களைப் பயன்படுத்தி தண்ணீரை சதுப்பு நிலத்திற்குள் வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டும், இதுவரை முழுமையாக நீர் வடியவில்லை என அன்புமணி தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையிலும், தடுப்புச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, ஏற்கனவே செய்யப்பட்ட கட்டுமானங்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் 6-ஆம் தேதி பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணியும், செப்டம்பர் 12-ஆம் தேதி தானும் நேரில் ஆய்வு செய்தபோதும் இதே எச்சரிக்கையை தெரிவித்ததாக கூறியுள்ளார். தடுப்புச்சுவர் மற்றும் நடைபாதைக்கு கீழ் பெரிய அளவிலான குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளதால் மழைநீர் எளிதில் வெளியேறும் என வனத்துறை அதிகாரி தமக்கு விளக்கம் அளித்ததாகவும், ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள நிலை அந்த விளக்கம் தவறானது என்பதை நிரூபித்துள்ளதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

Advertisement
சென்னையின் சில பகுதிகளில் கடந்த 17-ஆம் தேதி 30 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்தபோதும், சில மணி நேரங்களில் மழைநீர் வடிந்துவிட்டது. ஆனால் பள்ளிக்கரணை மற்றும் ஜல்லடியான்பேட்டை பகுதிகளில் நீர் நீண்ட நேரமாக தேங்கி நிற்பது, சதுப்பு நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பை வெளிப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார். ஒரே நாளில் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், வடகிழக்கு பருவமழையின்போது தொடர்ந்து பல நாட்கள் மழை பெய்தால் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். குறிப்பாக வேளச்சேரி, பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், சென்னையின் முக்கியமான இயற்கை மழைநீர் சேகரிப்பு அமைப்பான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தடுப்புச்சுவர் அமைப்பது முரண்பாடாக இருப்பதாகவும் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் திட்டம் கடந்த தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டிய முக்கியமான இயற்கை வளமாக கருத வேண்டும் என்றும், அதன் இயல்பை பாதிக்கும் எந்த நடவடிக்கையும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,490
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு