Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

பலுசிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை: 74 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தகவல்

பலுசிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை: 74 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தகவல்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் ராணுவம் நடத்திய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் 74 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில், நீண்டகாலமாக தனிநாடு கோரிக்கையை முன்வைத்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் இறுதியில், 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி பலுசிஸ்தான் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், 1948-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் அப்பகுதியைக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல்வேறு அமைப்புகள் அங்கு செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் தலிபான் அமைப்பின் கிளையான தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலுசிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளதாக பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதன் காரணமாக, அந்த மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisement
இந்நிலையில், கடந்த 3-ம் தேதி முதல் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் ராணுவம் தீவிர தேடுதல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்தியுள்ளது. இதில் மொத்தம் 74 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பலுசிஸ்தானின் குவெட்டா மாவட்டத்தில் உள்ள குர்ரம் பகுதியிலும், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் மிர் அலி மற்றும் ஒரக்ஸாய் பகுதிகளிலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக ராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், உளவுத்துறை அளித்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய நபர்களின் இருப்பிடங்கள் கண்டறியப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ராணுவம் கூறியுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு சம்பவ இடங்களில் இருந்து அதிக அளவிலான துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு