பராமரிப்பு பணி: கோவை - நாகர்கோவில் ரெயில் சேவையில் மாற்றம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

05 Sep 2026 www.thinathulir.com

பராமரிப்பு பணி: கோவை - நாகர்கோவில் ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணி: கோவை - நாகர்கோவில் ரெயில் சேவையில் மாற்றம்

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்: 16322) குறிப்பிட்ட நாட்களில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளது. கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், இன்று (சனிக்கிழமை) மற்றும் வருகிற 8, 10, 12 ஆகிய தேதிகளில் வழக்கமான பாதையில் இயக்கப்படாது. அதன்படி, கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் ரோடு, சோமனூர், திருப்பூர், ஊத்துக்குளி, ஈங்கூர், ஈரோடு, பகுர், கொடுமுடி, புகலூர், கரூர் பாளையம், எரியோடு ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக இந்த ரெயில் செல்லாது. இதற்கு பதிலாக, பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய நிலையங்கள் வழியாக ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.