Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறையா? தமிழக அரசு முக்கிய ஆலோசனை

பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறையா? தமிழக அரசு முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் பண்டிகை காலங்களில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு கூடுதல் விடுமுறை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மாநிலம் முழுவதும் உள்ள சில்லறை விற்பனைக் கடைகள் வாயிலாக மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், ராமலிங்கர் நினைவு நாள், மகாவீர் ஜெயந்தி, மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள் மற்றும் காந்தி ஜெயந்தி என ஆண்டுக்கு 8 நாட்கள் மட்டுமே டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

Advertisement
இந்நிலையில், முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பண்டிகை காலங்களில் ஏற்படக்கூடிய சட்டம்-ஒழுங்கு சிக்கல்களைத் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், இனி பண்டிகை தினங்களில் மட்டுமின்றி, அதற்கு முந்தைய நாளிலும் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டால், டாஸ்மாக் கடைகளுக்கு ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் விடுமுறை நாட்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு