Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 28 அக்டோபர் 2026 | 11 ஐப்பசி பராபவ வருடம்

‘பணி நேரம் மட்டுமல்ல, உணவு இடைவேளையிலும் வெளியே செல்லக் கூடாது’ – ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

‘பணி நேரம் மட்டுமல்ல, உணவு இடைவேளையிலும் வெளியே செல்லக் கூடாது’ – ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பள்ளி வேலை நேரத்திலும் உணவு இடைவேளையின்போதும் வளாகத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஆசிரியர்கள் தங்களது பணி நேரம் முழுவதும் பள்ளியில் இருக்க வேண்டும் என்றும், உணவு இடைவேளை நேரத்திலும் பள்ளி வளாகத்தை விட்டு வெளியேற அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
மேலும், பள்ளிகளில் அசாதாரணமான சூழல்கள் அல்லது நிகழ்வுகள் ஏற்பட்டால், அதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய நேரங்களில் தாங்களாகவே முடிவுகளை எடுப்பதைத் தவிர்த்து, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு உரிய ஆலோசனைகளைப் பெற்றுச் செயல்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு