Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 26 செப்டம்பர் 2026 | 10 புரட்டாசி பராபவ வருடம்

பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: நில அளவையர் கைது; புரோக்கரும் சிக்கினார்

பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: நில அளவையர் கைது; புரோக்கரும் சிக்கினார்

சேலம் அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கதிரவன் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரது தந்தை பெயரில் இருந்த வீட்டின் பட்டாவை தனது பெயருக்கு மாற்றுவதற்காக அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் உள்ள நில அளவையர் பிரிவில் விண்ணப்பித்திருந்தார். அப்போது பணியில் இருந்த நில அளவையர் முருகேசன், பட்டா மாற்றம் செய்து வழங்குவதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என கதிரவனிடம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத கதிரவன், இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

Advertisement
இதையடுத்து போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரம் பணத்தை கதிரவனிடம் கொடுத்து, அதனை நில அளவையரிடம் வழங்குமாறு அறிவுறுத்தினர். இதன்படி நேற்று காலை அம்மாப்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு சென்ற கதிரவன், ரூ.5 ஆயிரத்தை நில அளவையர் முருகேசன் மற்றும் அவர் மூலம் நியமிக்கப்பட்டதாக கூறப்படும் புரோக்கர் பூவரசன் ஆகியோரிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு