இந்திய திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் பூஜா ஹெக்டே, தமிழில் முகமூடி,பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய்க்கு ஜோடியாக அவர் நடித்த ஜனநாயகன் திரைப்படம் அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பூஜா ஹெக்டே, திரைப்படத் துறையில் நிலைத்திருப்பது குறித்து தனது கருத்துகளை பகிர்ந்தார். அவர் பேசுகையில், "திரைப்படத் துறை என்பது புதைமணலைப் போன்றது. இதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
Advertisement
இல்லையெனில் அதில் சிக்கிக்கொண்டு முன்னேற்றத்தை இழக்க நேரிடும். அதனால் போட்டி இருந்தாலும், பொறாமைக்கு இடமளிக்காமல் பயணிப்பது அவசியம்.இந்தத் துறையில் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் இருந்தால்தான் முன்னேற முடியும். இன்று வெற்றி பெற்றிருக்கும் ஒவ்வொருவரின் பின்னணியிலும் பல சவால்களும் கசப்பான அனுபவங்களும் இருக்கும். அவமானங்களையும் தடைகளையும் கடந்து சென்றால்தான் வெற்றியை அடைய முடியும்," என்று பூஜா ஹெக்டே தெரிவித்தார்.