Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 17 அக்டோபர் 2026 | 31 புரட்டாசி பராபவ வருடம்

நடிகை திரிஷாவை அரசியலுக்கு வரவேற்று மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் வைரல்

நடிகை திரிஷாவை அரசியலுக்கு வரவேற்று மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் வைரல்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அண்மைக் காலமாக அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா தொடர்பான பல்வேறு விவகாரங்கள் அடிக்கடி பேசுபொருளாகி வருகின்றன. சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து பதிவு மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவலாக கவனம் பெற்றது. இதனைத் தொடர்ந்து, அவர் அரசியலில் களமிறங்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவின. ஆனால் அந்த தகவல்களுக்கு அவரது தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.இந்த சூழலில், மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் நடிகை திரிஷாவை அரசியலுக்கு வரவேற்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Advertisement
அந்த போஸ்டர்களில், "எந்த அரசியல் கட்சியும் தொடங்கும் முதல் மண் எங்கள் மதுரை. மதுரை மீனாட்சி அம்மன் அருளால், தமிழக சங்க வரலாற்றில் முதல் முறையாக தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம், மதுரை மாவட்டம் திரிஷா நற்பணி மன்றம்" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.இந்த போஸ்டர்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பேசுபொருளாகி வருகின்றன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,515
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு