Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 06 அக்டோபர் 2026 | 20 புரட்டாசி பராபவ வருடம்

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழர்கள் இருவர் தேர்வு: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழர்கள் இருவர் தேர்வு: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் தங்கராஜ் மற்றும் ஆசிரியை அமுதா ஆகியோருக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டின் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் மதுரையில் உள்ள பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் முக்கியப் பணியை மேற்கொண்டு வரும் இருவரின் அர்ப்பணிப்பு, புதுமையான கற்பித்தல் அணுகுமுறை மற்றும் மாணவர்களின் நலனில் கொண்டுள்ள அக்கறைக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கும் ஆசிரியர் சமூகத்திற்கும் பெருமை சேர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், இந்த தேசிய விருது அவர்களின் பணிக்கு கூடுதல் ஊக்கத்தை அளித்து, ஏராளமான மாணவர்களின் வாழ்க்கையில் சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்தட்டும் என முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு