Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 26 செப்டம்பர் 2026 | 10 புரட்டாசி பராபவ வருடம்

தூத்துக்குடி துறைமுகத்தில் 10 நாட்களுக்கு இலவச சரக்கு சேமிப்பு வசதி: யாருக்கெல்லாம் பொருந்தும்..?

தூத்துக்குடி துறைமுகத்தில் 10 நாட்களுக்கு இலவச சரக்கு சேமிப்பு வசதி: யாருக்கெல்லாம் பொருந்தும்..?

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் நேரடி சரக்கு பெட்டக கப்பல் சேவையை ஊக்குவிக்கும் வகையில், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரக்குகளுக்கான சரக்கு பெட்டகங்களை 10 நாட்களுக்கு இலவசமாக சேமிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி துறைமுகம் வழியாக சரக்கு பெட்டக போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து சேவைகள் மூலம் கையாளப்படும் ஏற்றுமதி-இறக்குமதி சரக்குகள் அடங்கிய பெட்டகங்களுக்கு 10 நாட்கள் இலவச சேமிப்பு வசதி வழங்கப்படுகிறது. இதற்காக துறைமுகத்தில் சுமார் 40 ஆயிரம் சதுர மீட்டர் கூடுதல் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சரக்கு தளம் 7-ல் சுமார் 20 ஆயிரம் சதுர மீட்டரும், சரக்கு தளம் 10 அருகே மேலும் 20 ஆயிரம் சதுர மீட்டரும் ஒதுக்கப்பட்டுள்ளன. நேரடி சரக்கு பெட்டக கப்பல் சேவைகள் மூலம் துறைமுகத்திற்கு வரும் சரக்குகளை சேமிப்பதற்கான தேவையை பூர்த்தி செய்ய இந்த கூடுதல் இடம் பயன்படுத்தப்படும்.

Advertisement
இங்கு சரக்கு பெட்டகங்களை 10 நாட்கள் வரை கட்டணமின்றி சேமிக்கலாம். அதன்பிறகு, துறைமுக ஆணையத்தின் நடைமுறையில் உள்ள கட்டண அட்டவணைப்படி சேமிப்புக் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த இலவச சேமிப்பு வசதி நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து இயக்குனர்கள், முனைய இயக்குனர்கள், பெருந்தொழில் நிறுவனங்கள், சரக்கு போக்குவரத்து ஒருங்கிணைப்பாளர்கள், சுங்க தரகர்கள், கப்பல் இயக்காமல் சரக்கு போக்குவரத்து சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் உள்ளிட்ட பங்குதாரர்களுக்கு வழங்கப்படும். மேலும், துறைமுகத்தின் நடைமுறையில் உள்ள விதிமுறைகள், இடவசதி மற்றும் செயல்பாட்டு வசதிகளுக்கு உட்பட்டே இந்த சலுகை வழங்கப்படும். இந்த வசதி நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து சேவைகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதுடன், 31.03.2027 வரை நடைமுறையில் இருக்கும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு