Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 21 செப்டம்பர் 2026 | 5 புரட்டாசி பராபவ வருடம்

துணை ஜனாதிபதி கோவை வருகை; கவர்னர், அமைச்சர் வரவேற்பு

துணை ஜனாதிபதி கோவை வருகை; கவர்னர், அமைச்சர் வரவேற்பு

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று மதியம் சிறப்பு விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு தமிழக கவர்னர் அர்லேகர் பூங்கொத்து வழங்கி வரவேற்பு அளித்தார். அப்போது அமைச்சர் சம்பத் குமார், மாவட்ட கலெக்டர் பவன் குமார், மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் உடனிருந்தனர். தென்னிந்திய தேயிலை தொழிலின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வரும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமாக உபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நூற்றாண்டு மாநாடு இன்று நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெறுகிறது. இதில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். கடந்த 1926-ம் ஆண்டு அக்டோபரில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் சிறிய தேயிலை சோதனை நிலையமாக தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது தென்னிந்திய தேயிலை தோட்ட உரிமையாளர் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

Advertisement
தேயிலை விவசாயம் மற்றும் உற்பத்தி தொழில்நுட்ப மேம்பாட்டில் பணியாற்றும் சர்வதேச அளவிலான முக்கிய ஆராய்ச்சி நிறுவனமாக இது வளர்ச்சி பெற்றுள்ளது. நூற்றாண்டு மாநாட்டில் பங்கேற்பதற்காக கோவையில் இருந்து சாலை வழியாக துணை ஜனாதிபதி குன்னூருக்கு செல்கிறார். அவரது வருகையை முன்னிட்டு அப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, 9-வது இந்திய சர்வதேச நீர் வாரம் 2026 நிகழ்ச்சியை துணை ஜனாதிபதி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,270
🥈 Silver ₹260.00
Petrol ₹107.77
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு