Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை வருகை: இயல்பு நிலைக்கு திரும்பும் மாநகரம்

தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை வருகை: இயல்பு நிலைக்கு திரும்பும் மாநகரம்

சென்னையில் கல்வி, வேலைவாய்ப்பு, வணிகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் மற்றும் சொந்த வாகனங்கள் வாயிலாக 17 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்தனர். தீபாவளிக்கு மறுநாளான நேற்று (9-ம் தேதி) அரசு விடுமுறை என்பதால், ஊர்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. பயணிகளின் வசதிக்காகவும், அவர்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ளவும் கூடுதலாக 300 மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 3,870 பேருந்துகள் இயக்கதீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக நேற்று மொத்தம் 3,870 பேருந்துகள் இயக்கப்பட்டன.

Advertisement
இதில் 2,191 வழக்கமான பேருந்துகளும், 1,351 சிறப்புப் பேருந்துகளும் அடங்கும். அரசு பேருந்துகள் மூலம் மட்டும் 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் சென்னைக்கு திரும்பியுள்ளனர். தாம்பரம் ரயில் நிலையத்தில் கூட்டம் தீபாவளி தொடர் விடுமுறை நிறைவடைந்துள்ள நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்படுகிறது.விக்கிரவாண்டி சுங்கச்சாவடியைக் கடந்த 48,843 வாகனங்கள் தென் மாவட்டங்களில் இருந்து சென்னையை நோக்கி ஏராளமான வாகனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. நேற்று முதல் பொதுமக்கள் சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், இதுவரை விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வழியாக 48,843 வாகனங்கள் கடந்துள்ளன. தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு வரத் தொடங்கியுள்ளதால், மாநகரின் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் படிப்படியாக வழக்கமான நிலைக்குத் திரும்பி வருகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு