Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 12 செப்டம்பர் 2026 | 27 ஆவணி பராபவ வருடம்

அமெரிக்காவில் அதிர்ச்சி: உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு, 5 பேர் காயம்

அமெரிக்காவில் அதிர்ச்சி: உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு, 5 பேர் காயம்

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் நகரில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் திடீரென ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மர்ம நபர் நடத்திய இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 5 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.காயமடைந்தவர்களில் 2 வயது குழந்தையும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி மாலை சுமார் 6 மணியளவில் சியாட்டில் சென்டர் வளாகத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் அச்சத்தில் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.

Advertisement
சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள வீடியோக்களிலும், மக்கள் பதற்றத்துடன் சிதறி ஓடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தஇருவரின்அடையாளம்இதுவரைஅதிகாரப்பூர்வமாகவெளியிடப்படவில்லை.துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியாத நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என சியாட்டில் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
PRGI NO : TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு