Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 22 செப்டம்பர் 2026 | 6 புரட்டாசி பராபவ வருடம்

திருமாவளவன் பயன்படுத்தியது சினிமா படப்பிடிப்பு வாடகை கார்; விசிக விளக்கம்

திருமாவளவன் பயன்படுத்தியது சினிமா படப்பிடிப்பு வாடகை கார்; விசிக விளக்கம்

சென்னை, செப். 22: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், டி.என். 07 சி.எம். 2031என்ற பதிவு எண்ணைக் கொண்ட காரில் சென்றதாகக் கூறி சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வேகமாகப் பரவியது. கோட் சூட் அணிந்து திருமாவளவன் அந்த காரில் தோன்றியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளித்து விசிக பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தனியார் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு சார்பில் “திருமா 35 – நீதியின் சகாப்தம்” என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி. 5 பிலிம் சிட்டியில் நடைபெற்ற படப்பிடிப்பின் ஒரு பகுதியாக, கூரை திறந்த நிலையில் உள்ள வாகனத்தில் திருமாவளவன் வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்பட்ட அந்த கார் வாடகைக்கு விடப்படும் விலை உயர்ந்த வாகனம் என்றும், அதன் பதிவு எண்ணை படப்பிடிப்பு குழுவினரே வடிவமைத்ததாகவும் எஸ்.எஸ். பாலாஜி தெரிவித்துள்ளார்.

Advertisement
மேலும், எதிர்காலத்தில் விசிக ஆளும் கட்சியாக உருவெடுக்கும் என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையில் **டி.என். 07 சி.எம். 2031** என்ற வாகன எண்ணை படப்பிடிப்பு குழுவினர் உருவாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் காரின் வகை மற்றும் அதன் பதிவு எண் குறித்து திருமாவளவனுக்கு முன்கூட்டியே தெரியாது என்றும், நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவே அவற்றை முடிவு செய்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு திருமாவளவன் மீது அவதூறு பரப்பப்படுவதாகவும் விசிக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் எதிர்கால அரசியல் திசையை மக்கள் தீர்மானிப்பார்கள் என்றும், அந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு காத்திருப்பதே தங்களது நிலைப்பாடு என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழின மேம்பாடு மற்றும் சமூகநீதியில் அக்கறை கொண்டவர்கள் இதுபோன்ற அவதூறு கருத்துகளை கண்டிக்க வேண்டும் என்றும் விசிக பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,270
🥈 Silver ₹260.00
Petrol ₹108.50
🛢️ Diesel ₹100.30
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு