Skip to main content
🌤️ —°C
சனி | 22 ஆகஸ்ட் 2026 | 6 ஆவணி பராபவ வருடம்

திருமூர்த்தி அணையில் வண்டல் மண் அள்ளும் பணி மீண்டும் தொடக்கம்

திருமூர்த்தி அணையில் வண்டல் மண் அள்ளும் பணி மீண்டும் தொடக்கம்
உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள திருமூர்த்தி அணையில், தண்ணீர் தேக்கி வைக்கப்படும் பகுதிகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்றும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்கான பணிகளை அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.திருமூர்த்தி அணைக்கு வனப்பகுதிகளில் உருவாகும் ஆறுகள், ஓடைகள் மூலம் நீர் கிடைக்கிறது. மேலும், பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்தும் இங்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இந்த அணையின் பாசனத்தை நம்பி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பி.ஏ.பி. பாசனத் திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன. அதேபோல், பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளில் தளி மற்றும் வளையபாளையம் வாய்க்கால்கள் வழியாக 3 ஆயிரத்து 44 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கும் இந்த அணை முக்கிய நீராதாரமாக உள்ளது. விவசாயிகள் கோரிக்கை கோடை காலத்தை பயன்படுத்தி அணையில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்றி, விவசாய நிலங்களுக்கு கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 27-ந் தேதி வண்டல் மண் அகற்றும் பணி தொடங்கியது.ஆனால், மண் அள்ளும் பணியில் முறைகேடுகள் நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 31-ந் தேதி பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.இதற்கிடையே, வண்டல் மண் அகற்றுவதற்கான அனுமதியை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
Advertisement
இந்த விவகாரம் சட்டசபையிலும் எழுப்பப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று முதல் மீண்டும் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் வண்டல் மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கண்காணிப்பை தீவிரப்படுத்த கோரிக்கை இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: வண்டல் மண் அகற்றும் பணியில் முறைகேடு ஏற்பட்டதாக புகார் எழுந்ததால், அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் பணி தொடங்கியுள்ள நிலையில், அதிகாரிகள் தினசரி முறையாக கண்காணிக்க வேண்டும்.ஒவ்வொரு நபரும் எவ்வளவு கன மீட்டர் மண்ணை எடுத்துச் செல்கிறார் என்பதையும், அந்த மண் அவருடைய சொந்த நிலத்துக்குத்தான் கொண்டு செல்லப்படுகிறதா அல்லது வேறு பயன்பாட்டுக்காக எடுத்துச் செல்லப்படுகிறதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். விவசாயிகள் அல்லாதவர்கள் வணிக நோக்கத்திற்காக அணைப்பகுதியில் இருந்து மண் எடுத்துச் செல்கிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.மேலும், வண்டல் மண்ணுக்கு பதிலாக சரளைமண், செம்மண் உள்ளிட்ட பிற வகை மண்ணும் எடுத்துச் செல்லப்படுகிறதா என்பதையும் அதிகாரிகள் கவனிக்க வேண்டும். கண்காணிப்பும் நடவடிக்கையும் கடுமையாக இருந்தால்தான் தகுதியானவர்கள் இந்த அனுமதியின் மூலம் பயனடைய முடியும்.அணையில் தேங்கியுள்ள வண்டல் மண் முறையாக விவசாய நிலங்களுக்கு சென்றடைந்தால், விவசாய நிலங்களின் பயன்பாடும் விளைச்சலும் அதிகரித்து, விவசாயிகளுக்கும் பயன் கிடைக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு