தமிழகத்தில் இரண்டு நாட்களில் 17 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் அரசியல் கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. தீபாவளி பண்டிகையின்போது இத்தனை கொலைகள் நடந்துள்ளதை சுட்டிக்காட்டிய தலைவர்கள், தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளனர். அசுரர்களின் ஆட்சியை நினைவுபடுத்தும் வகையில் மாநிலத்தில் நிலைமை இருப்பதாகவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சூழலில், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Advertisement
இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். தீபாவளி நாளில் மட்டும் 11 கொலைகள் நிகழ்ந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளன. இதையடுத்து, மாநிலத்தின் பாதுகாப்பு நிலை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.