Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 28 அக்டோபர் 2026 | 11 ஐப்பசி பராபவ வருடம்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் பனி மூட்டம்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் பனி மூட்டம்

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை நேரத்தில் கடும் பனிமூட்டம் நிலவியதால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகினர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே பகுதியில் நிலைகொண்டிருந்தது. இதையடுத்து, நேற்று அதிகாலை 5.30 மணியளவில் மேற்கு திசையில் நகர்ந்த இந்த அமைப்பு, மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்றது. இதற்கு ‘அர்னாப்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று (செவ்வாய்க்கிழமை) அதே பகுதிகளில் மேலும் வலுப்பெற்று மிக தீவிர புயலாக மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் புயல், நாளை (புதன்கிழமை) முற்பகலில் ஆந்திரா மற்றும் ஏனாம் கடற்கரை பகுதிகளில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே ஏனாம் அருகே மிக தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 140 கி.மீ. வேகம் வரையிலும் காற்று வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது. புயலின் தாக்கத்தால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசுவதுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Advertisement
தமிழகத்தின் பிற பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை சென்னை, செங்கல்பட்டு, மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், கோவை, திருச்சி, அரியலூர், சிவகங்கை, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. சில இடங்களில் காலை 8 மணி வரையிலும் பனிமூட்டம் நீடித்தது. குறிப்பாக திருச்சி காவேரி பாலம் பகுதியில் பனிமூட்டம் காரணமாக சுற்றுப்புறம் வெள்ளை நிறப் புகை சூழ்ந்தது போல் காணப்பட்டது. ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் தஞ்சை பெரிய கோவில் ஆகியவையும் பனிமூட்டத்தால் மறைந்த காட்சியளித்தன. சாலைகளிலும் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கினர். இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்தனர். கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், இன்று பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியது குறிப்பிடத்தக்கது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு