தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழில் பழகுநர் பயிற்சிக்கு வாய்ப்பு
மதுரை, ஜூலை 21-
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை மண்டலத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்கள் சார்பில் தொழில் பழகுநர் பயிற்சியில் சேர தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.பெறியியல் பட்டம் ( முதல் வகுப்பு), பட்டய படிப்பு (இயந்திரவியல், தானியங்கியியல், மின் மற்றும் மின்னணுவியல்) மற்றும் பட்டப்படிப்பு (கலை, அறிவியல், வணிகவியல்) ஆகியவற்றில் 2022 முதல் மே 2026 வரையிலான ஆண்டுகளில் தேர்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்தகுதியுள்ளவர்கள் ஆன்லைனில் (https://nats.education.gov.in)ல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஆக.28 என மேலாண்மை இயக்குனர் சரவணன் தெரிவித்துள்ளார்.