Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 29 செப்டம்பர் 2026 | 13 புரட்டாசி பராபவ வருடம்

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக கோவை தேர்வு; சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் விஜய் விருது வழங்கினார்

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக கோவை தேர்வு; சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் விஜய் விருது வழங்கினார்

இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் சுதந்திர தின விழாவில், சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.இதற்கு முன்பாக, தமிழ்நாடு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார். பின்னர், தேசியக் கொடியை ஏற்றியதைத் தொடர்ந்து அவர் தனது முதல் சுதந்திர தின உரையை நிகழ்த்தினார்.அதன்பின், தமிழக அரசின் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

Advertisement
சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.அதன்படி, தமிழகத்தின் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசை கோவை மாநகராட்சி பெற்றது. இரண்டாவது இடத்தை தஞ்சாவூர் மாநகராட்சி பிடித்தது.நகராட்சிகள் பிரிவில், தேனி மாவட்டத்தின் போடிநாயக்கனூர் நகராட்சி முதல் பரிசைப் பெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி நகராட்சி இரண்டாம் பரிசையும், விழுப்புரம் நகராட்சி மூன்றாம் பரிசையும் பெற்றன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,640
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு