தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கூறுவதென்ன..?
வெளியிட்ட முக்கிய தகவல்கள்சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருவதால், மாநிலத்தின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 22:தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 23:மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மாநிலத்தின் பிற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். ஜூலை 24:வட கடலோர தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இடி, மின்னலுடன் பலத்த காற்றும் வீசக்கூடும். ஜூலை 25:மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுக்கும் வாய்ப்பு உள்ளது. ஜூலை 26:கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 27: தமிழகத்தின் பல பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடரக்கூடும்.