Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 09 அக்டோபர் 2026 | 23 புரட்டாசி பராபவ வருடம்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்த திமுக!

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்த திமுக!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தேர்தலில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்ட திமுக வேட்பாளர் கு. சேது செல்வம், டெபாசிட் தொகையை இழந்தார். தட்டாஞ்சாவடி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த், காங்கிரஸ் கட்சி சார்பில் விநாயகம், திமுக சார்பில் சேது செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சலீம் உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் களமிறங்கினர். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவில் 10,056 ஆண்கள், 11,695 பெண்கள், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 21,756 வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் 87.10 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால், தற்போதைய இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு 80.81 சதவீதமாகக் குறைந்தது. இதன் மூலம் முந்தைய தேர்தலைவிட 6.29 சதவீதம் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. அங்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, இயந்திரங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டன.

Advertisement
இதையடுத்து, இன்று காலை 8 மணிக்கு மோதிலால் நேரு பாலிடெக்னிக் மையத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் நான்கு சுற்றுகளாக எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் முன்னிலை வகித்தார். இறுதியில், அவர் வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அசோக் ஆனந்த் மொத்தம் 13,358 வாக்குகளைப் பெற்று, 61.12 சதவீத வாக்குகளைத் தன்வசப்படுத்தினார். காங்கிரஸ் வேட்பாளர் இ. விநாயகம் 4,876 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். திமுக வேட்பாளர் சேது என்கிற கு. சேது செல்வம் 2,664 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் அ.மு. சலீம் 310 வாக்குகளுடன் நான்காவது இடத்தையும் பிடித்தனர். இந்தத் தேர்தலில் 12.19 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற திமுக வேட்பாளர் சேது செல்வம், டெபாசிட் தொகையை இழந்துள்ளார். தேர்தல் விதிகளின்படி, வேட்பாளர் தனது டெபாசிட் தொகையைத் திரும்பப் பெற, அந்தத் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் குறைந்தபட்சம் ஆறில் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். அந்த அளவை எட்டத் தவறியதால் திமுக வேட்பாளரின் டெபாசிட் பறிபோனது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு